Wednesday, February 16, 2011

கதாநாயகனாக நடிக்கப்போகும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவாரா


உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக கண்டிப்பாக வெற்றி பெற மாட்டார். எழுபதுகளில் கலைஞரின் மகன் மு.க.முத்து பிள்ளையோ பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படமும் சூப்பர் ஹிட். அதன் பிறகு வந்த பூக்காரி, அணையா விளக்கு எல்லாம் சுமார் ரகம். அதன் பிறகு அவர் நிலைமை என்ன ஆனது? அதே ரிசல்ட் தான் உதயநிதிக்கும். அவர் சிவாஜியை விட நன்றாக நடித்தாலும் பொதுமக்கள் எனப்படும் ரசிகர்கள் அவரை ரசிக்க மாட்டார்கள். கலைஞரின் பேரன் என்பது அதிகாரம்,பணவசதி போன்றவற்றிற்கு உதவுமே தவிர திரையுலக நாயகன் என்பதில் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். வேண்டுமானால் அவ்வப்போது சொந்தமாகவோ பினாமியிலோ படம் எடுத்து நாயகனாக நடித்து கலை தாகத்தை (?) தணித்துக்கொள்ளலாம்.

மே மாதம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி


மே மாதம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி?

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மாபெரும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக வருவார் என்பது உறுதி.
எண்பத்து நான்காம் வருடம் முதல் சென்ற சட்டசபை தேர்தல் வரை திமுகவும் அண்ணா திமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது.
எண்பத்து நான்கு - அண்ணா திமுக
எண்பத்து ஒன்பது - திமுக
தொண்ணூற்று ஒன்று - அண்ணா திமுக
தொண்ணுற்று ஆறு - திமுக
இரண்டாயிரத்து ஒன்று - அண்ணா திமுக
இரண்டாயிரத்து ஆறு - திமுக
இரண்டாயிரத்து பதினொன்று - அண்ணா திமுக .
அது மட்டுமில்லாமல் சென்ற தேர்தலில் (மாபெரும் ஊழல்கறைபடியாத)திமுக காங்கிரஸ்.பா.ம.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் (தற்போது விடுதலை சிறுத்தைகள் அதை சமன் செய்கிறது) இணைந்து போட்டியிட்டும்,அண்ணா திமுக அறுபது இடங்களை கைப்பற்றியது. இத்தனைக்கும் முதல் முறையாக களத்தில் இறங்கிய விஜயகாந்தின் தே,மு.திகவிற்கு, திமுக அண்ணா திமுகவிற்கு மாற்றாக இருக்குமென்று பொது மக்கள் சிலர்வாக்களித்தது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா திமுக சுமார் நாற்பது இடங்களில் தோற்க காரணமாக இருந்தது. ஆனால் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டுமல்லாமல் கருணாநிதியின் குடும்பம் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியதால் பட்டி தொட்டியெல்லாம் பெயர் கெட்டுபோய் திமுக வலுவிழந்து உள்ளது. ஊடகங்கள் அனைத்தும் அடுத்த ஆட்சி அண்ணா திமுக தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால், பொது மக்களும் திமுக ஆட்சி விலக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமின்றி ஜெயிக்கும் கட்சிக்கே வாக்களிக்க விரும்பி அண்ணா திமுகவிற்கே வாக்களிப்பார்கள். தேமுதிகவிற்கு வாக்களிப்பது வாக்குகளை பிரித்து திமுகவிற்கே வெற்றி கிடைக்க செய்யும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொண்டு விட்டார்கள். திமுகவிற்கு மாற்று அண்ணா திமுக மட்டும் தான் என்பதால் தேமுதிகவிற்கு வாக்களிப்பது வீண் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு விட்டது அண்ணா திமுகவிற்கு மிக பெரிய வெற்றியை தேடித் தரும் .. எனவே ஜெயலலிதாவும் விஜயகாந்திற்கு இருபது சீட்டுக்கு மேல் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் தேர்தலுக்கு பிறகு சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யத்தை காங்கிரசுடன் இணைத்தது போல விஜய்காந்தும் கண்டிப்பாக சில எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசுடன் இணைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பா.ம.கவை வளர்த்து விட்டது போல தேமு.திகவையும் ஜெயலலிதா வளர்த்து விடாமல் இருப்பது அவருக்கும் அவர் கட்சிக்கும் நல்லது.