Wednesday, June 30, 2010

காவிய கவிஞர் வாலி


தமிழ்த்திரையுலகில் ஐம்பதாண்டு காலமாக பாடல்கள் எழுதுவதோடு அவதார புருஷன் போன்ற காவியங்களை படைத்தவர் வாலி. அவர்கள்.கவியரசு கண்ணதாசன் காலம் முதல்   இன்று நா. முத்துகுமார் காலம் வரை அனைவருக்கும் ஈடு கொடுத்து எழுதி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் வாலி அவர்கள். இந்தியத்திரையுலகில் ஒரு பாடலுக்கு அதிகப்பட்சமாக இரண்டரை லட்சம் (சிவாஜி படத்தில் அதிரடிக்காரன் பாடல்)பெற்ற ஒரே கவிஞர் வாலி. அன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதல் இன்றுஅருண் விஜய் வரை அவர் எழுதிய பாடல்களின் ஒரு தொகுப்பு.
எம்.ஜி.ஆர் - எங்க வீட்டு பிள்ளை : நான் ஆணையிட்டால் உட்பட ஏராளம்.
ஜெமினிகணேசன் - இதயத்தில் நீ: யார் சிரித்தால் என்ன
சிவாஜிகணேசன் - இருமலர்கள்: மாதவிப்பொன் மயிலாள் உட்பட ஏராளம்
ரவிச்சந்திரன் -அதே கண்கள் - சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்
ஜெய்ஷங்கர்- மன்னிப்பு : நீ எங்கே என் நினைவுகள் அங்கே
ஏ,வி.எம்.ராஜன்- சக்கரம்: காசேதான் கடவுளடா
நாகேஷ்: சர்வர் சுந்தரம்: அவளுக்கென்ன அழகிய முகம்
ஸ்ரீகாந்த்- பூவா தலையா : போடச்சொன்னா போட்டுக்கறேன்
முத்துராமன் - பஞ்சவர்ணக்கிளி :அவளுக்கும் தமிழ் என்று பேர்
தேங்காய் ஸ்ரீனிவாசன் - கலியுகக்கண்ணன்: ஜெயிச்சுட்டே கண்ணா
ஜெய்கணேஷ்- அன்பே சங்கீதா: கீதா சங்கீதா
வி.கோபாலகிருஷ்ணன்- நெஞ்சிருக்கும் வரை : நெஞ்சிருக்கும் எங்களுக்கு
விஜயகுமார் - நான் குடித்துக்கொண்டே இருப்பேன்: குடிக்காதே தம்பி
கமல் - சகலகலா வல்லவன்: இளமை இதோ உட்பட ஏராளமான படங்கள்
ரஜினி - மன்னன் : அம்மா என்றழைக்காத உட்பட ஏராளமான படங்கள்
அர்ஜுன் - சாது : அம்மம்மா
பார்த்திபன் - பெண்டாட்டி தேவை படப்பாடல்
நாசர் - அவதாரம் :தென்றல் வந்து
எஸ்.வி.சேகர் : மணல்கயிறு : மந்திரப்புன்னகை
விஜயகாந்த்- வைதேகி காத்திருந்தாள்: ராஜாத்தி உன்னை
பிரபு - சின்ன தம்பி : தூளியிலே ஆடவந்த
ராமராஜன்-ஊரெல்லாம் உன் பாட்டு தான்-ஊரெல்லாம் உன் பாட்டு 
சத்யராஜ் - மிஸ்டர் பாரத் : என்னம்மா கண்ணு
பாண்டியராஜன் - ஆண் பாவம்: காதல் கசக்குதய்யா
விஜய்- பிரியமானவளே : எனக்கொரு சிநேகிதி உட்பட நிறைய பாடல்கள்
அஜித் - தீனா : வத்திக்குச்சி பத்திக்காதுடா
மாதவன் - மின்னலே : அழகிய தீயே
விவேக் &வடிவேலு : லூட்டி : நான் மதுரை
சிலம்பரசன் - சிலம்பாட்டம் : தமிழ்
விக்ரம் - பிதாமகன் : பிறையே
கவுண்டமணி-பிறந்தேன் வளர்ந்தேன் 
முரளி - இதயம் : போட்டு வைத்த
பிரபுதேவா - ஜென்டில்மேன் : சிக்குபுக்கு
ராஜுசுந்தரம்- இதயம் : ஒ பார்டி நல்ல பார்ட்டி தான்.
ராஜுபிரபு - தொட்ட சிணுங்கி : தலைவா ரஜினி
மோகன் - மௌன ராகம் : நிலாவே வா உட்பட நிறைய பாடல்கள்
கார்த்திக்- அக்னி நட்சத்திரம் : ராஜா ராஜாதி
மு.க.முத்து- அணையா விளக்கு : யாரும் வருவார்
கே. பாலாஜி- அன்புக்கரங்கள் : இரவு முடிந்து விடும்
சிவகுமார்- அக்னி சாட்சி : கனா காணும் கண்கள்
சரத்குமார்- சூரியன் : பதினெட்டு வயது
சரத்பாபு- கண்ணில் தெரியும் கதைகள்: நான் உன்னை நினைச்சேன்
29.10.12 
ரகுமான் -புதுப்புது அர்த்தங்கள் : கேளடி கண்மணி
ரமேஷ் அரவிந்த்- கேளடி கண்மணி : நீ பாதி நான் பாதி
பிரசாந்த் - கல்லுரி வாசல் : என் மனதை கொள்ளை
மேஜர் சுந்தரராஜன் - உயர்ந்த மனிதன் : அந்த நாள் ஞாபகம்
மம்மூட்டி- தளபதி : காட்டுக்குயிலு
பாக்யராஜ் - மௌன கீதங்கள் : மூக்குத்தி பூ மேலே
அரவிந்த்சாமி - மறுபடியும் : நலம் வாழ
ஜனகராஜ்- புதுப்புது அர்த்தங்கள் : எடுத்து நான் விடவா
பூர்ணம் விஸ்வநாதன் - வடைமாலை - வடைமாலை அமரன் ஜெய்
பிரதாப் - சொல்லாதே யாரும் கேட்டால் : போட்டது முளைத்தது
ராதாரவி- சூரக்கோட்டை சிங்கக்குட்டி : அப்பன் பேச்சை கேட்டது
குணால்- காதலர்தினம் : என்ன விலை அழகே
ரிச்சர்ட்ஸ்- காதல் வைரஸ் : பால் நிலா
டி.எம். எஸ். கல்லும் கனியாகும் படப்பாடல்
அப்பாஸ் &;வினீத் : காதல் தேசம் : முஸ்தபா
எஸ்.ஜே. சூர்யா : நியூ : காலையில் தினமும் கண்விழித்தால்
ஜெயம் ரவி - எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி : நீயே நானே
சூர்யா- ஜில்லுனு ஒரு காதல் : முன்பே வா அன்பே வா
அருண் விஜய்- மாஞ்சா வேலு - முன்னேறு ...பரத், சித்தார்த், நகுல் இணைந்து பாடிய- பாய்ஸ் : மாரோ ...
பிரேம்ஜிஅமரன்,ஜெய்   நடித்த கோவா படப்பாடல்,
முரளிக்கு பாடல் எழுதியவர் அவர் மகன் அதர்வா நடித்த பாணாவிற்கும் எழுதியுள்ளார். மிர்ச்சி சிவாவிற்காக தில்லுமுல்லு படப்பாடல்,லொள்ளு சபா ஜீவாவிற்கு 
மாப்பிள்ளை விநாயகர் படத்திற்கும் .சந்தானத்திற்காக"கண்ணா லட்டு தின்ன ஆசையா"விற்கும் எழுதியுள்ளார்.(மூன்றும்  திரைக்கு வரவிருப்பவை).பிரியாணி படத்திற்காக கார்த்தி,எதிர்நீச்சல் படத்திற்காக சிவ கார்த்திகேயன்,
மரியான்,மற்றும் நையாண்டி படத்திற்காக தனுஷ் என்று இவர் பாடல் பட்டியல் நீளுகிறது.
பல்வேறு நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பாடிய தேச ஒற்றுமையை உணர்த்தும் பாரத விலாஸ் பாடல் : இந்திய நாடு என் வீடு .
இது மட்டுமல்ல வாலி அவர்கள் எந்த கதாபாத்திரம் பாடுகிறதோ அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.
தாய்ப்பாசம் பற்றி அவர் எழுதிய பாடல்கள்
தேடி வந்த மாப்பிள்ளை : வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
மன்னன் : அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
நியூ : காலையில் தினமும் கண் விழித்தால்
மும்மதத்திற்கும் அவர் பாடல் இயற்றியிருக்கிறார்.
தாய் மூகாம்பிகை : ஜனனி ஜனனி
முகம்மதுப்பின் துக்ளக் : அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை
வெள்ளை ரோஜா : தேவனின் கோயிலிலே
தேவனுக்கு பாடல் எழுதிய அவர் தேவருக்கும் எழுதியுள்ளார். தேவர் மகன்: போற்றிபாடடி பெண்ணே . தோல்வியில் துவண்டு கிடப்பவர்களை தட்டி எழுப்ப வெற்றி வேண்டுமா போட்டு பாரடா -எதிர் நீச்சல் . குழந்தைகளுக்கு அறிவுரைப்பாடல் -நல்ல பேரை வாங்க வேண்டும் :நம் நாடு . ஒற்றுமையை வலியுறுத்தும் ஒண்ணா இருக்க கத்துக்கணும் : அன்புக்கரங்கள். கொள்கைப்பாடல்கள் - நான் ஆணையிட்டால் -எங்க வீட்டுப்பிள்ளை ,மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வ தாய் . பொதுவுடமைப் பாடல் : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -படகோட்டி ,காதலியை வர்ணனை செய்யும் பாடல் -மதுரையில் பிறந்த மீன் கொடியை-பூவா தலையா, பிரார்த்தனை பாடல் -இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (எம்.ஜி.ஆர் உடல் நலமில்லாத போது தமிழகமெங்கும் ஒலித்தது ), நம்பிக்கைக்கு - நாளை நமதே, சகோதர ஒற்றுமையைக்கு ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்- உரிமைக்குரல்,வர்த்த ரீதியாக ஆட்டம் போடா வைக்கும் -கட்ட வண்டி, இளமை இதோ , பெண்ணின் பெருமையை விளக்கும் மலரே குறிஞ்சி - டாக்டர் சிவா, நவராத்திரி பாடல்- கலை மகள் அலை மகள் - வெள்ளி ரதம் , முதல் ராத்திரிபாடல் - இது தான் முதல் ராத்திரி -ஊருக்கு உழைப்பவன், மதுவின் தீமை பற்றிய தைரியமாக சொல் நீ மனிதன் தானா - ஒளி விளக்கு, சாகா வரம் பெற்ற தத்துவ பாடல் - கண் போன போக்கிலே - பணம் படைத்தவன் இப்படி அவர் எழுதிய பாடல்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
அவர் அன்றும் இன்றும் எழுதிய பாடல்கள் பற்றிய ஒரு ஒப்பீடு :
நாயகி தன் தோழியரோடு பாடல் :
அன்று : பருவம் எனது பாடல் : ஆயிரத்தில் ஒருவன்
இன்று : அக்கடான்னு நாங்க உடை போட்டா : இந்தியன்
கடிதப்பாடல் : அன்று : அன்புள்ள மான் விழியே -குழந்தையும் தெய்வமும்
இன்று : கண்மணி அன்புடன் நான் எழுதும் - குணா
கேலிப்பாடல் :அன்று: என்ன வேகம் நில்லு - குழந்தையும் தெய்வமும்
இன்று - ஏ மாமா மாமா - மின்னலே .
காதலியிடம் அன்று : இந்த புன்னகை என்ன விலை -தெய்வத்தாய்
இன்று : என்ன விலை அழகே - காதலர் தினம்
வர்ணனைப் பாடல் : ஆழியிலே பிறவாத - பேசும் தெய்வம் (சிவாஜி)
பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன் (பிரபு)
அன்று : அவளுக்கும் தமிழ் - பஞ்சவர்ணக்கிளி (முத்துராமன்)
இன்று : ராஜா ராஜாதி -அக்னி நட்சத்திரம் (கார்த்திக்)
அன்று: உறவு என்றொரு சொல்லிருந்தால் - இதயத்தில் நீ (தேவிகா)
இன்று : அன்பே வா அருகிலே -கிளிப்பேச்சு கேட்கவா (கனகா )
அன்று- என்கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் (சிவகுமார்)
இன்று- முன்பே வா -ஜில்லுனு ஒரு காதல் (சூர்யா) அலெக்ஸ் பாண்டியன்,பிரியாணி படத்திற்காக-கார்த்தி அவர்களுக்கு.

அன்று- ஜெயுச்சுட்டே கண்ணா நீ -கலியுகக்கண்ணன் (தேங்காய் ஸ்ரீனிவாசன்)
இன்று - குக்காத்து மனுஷா -நளதமயந்தி (அவர் பேத்தி ஸ்ருதிகா ),கலைஞர் மகன் மு.க.முத்துவிற்காக அணையா விளக்கு-எவர் மனதில் குடியிருக்கும் 
இன்று கலைஞர் பேரன் அருள்நிதிக்காக வம்சம் படப்பாடல்.
அன்று ஷோபா சந்திரசேகர் பாடிய பாடல் ஓடிப்பிடிச்சு விளையாட :இரு மலர்கள் படத்தின் மகராஜா ஒரு மகராணி
இன்று அவர் மகன் விஜய் பாடிய ஒ ப்யாரி- பூவே உனக்காக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடி நடித்த அம்மா என்றால் அன்பு-அடிமைப்பெண், சூப்பர் ஸ்டார் பாடி நடித்த அடிக்குது குளிரு- மன்னன், கமல் பாடி நடித்த இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன் இப்படி பல பிரபலங்களுக்கு பாடல் எழுதிய ஒரே கவிஞர் வாலி அவர்கள் தான்.
வாழ்க கவிஞர் வாலி வளர்க அவர் புகழ்.

2 comments:

  1. முக.முத்துக்கு வாலி எழுதிய பாடல்களில் மிகச்சிறந்தது “மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ” என்ற பாடல் பிள்ளையோ பிள்ளை படத்துக்காக.

    அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் வாலியிடம் கேட்டாராம், “என்ன வாலி, மூன்று தமிழும் தோன்றியது முக.முத்திடமா?”

    அந்த அளவு ஒரு அருமையான பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையில்.

    அதுக்கப்புறம் வாலி எழுதிய முருகன் பாடல்களை விட்டுட்டீங்களே. முருகனுக்கு மேல ஒரு கதாநாயகன் உண்டா?

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்!

    ReplyDelete
  2. உண்மை தான்,அந்த "ஆறுபடை"முருகனை நான் மறப்பேனா?ஆனால் நான் திரைப்பட பாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டேன்.
    அதே போல் MGR ரசித்த மூன்று தமிழ் தோன்றியதும் பாடலையும் மறக்கவில்லை.அந்த பாடலும்,பூவா தலையாவில் மதுரையில் பறந்த மீன் கொடியை பாடலும் MGR திரையில் பாடியிருந்தால் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.ஒரு தகவல்(தங்களுக்கும் தெரிந்திருக்கலாம்):கவிஞர் வாலி
    அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது அவரிடம் உடல்நலம் விசாரித்தேன்,அப்போது அவர் குரலே கரகர என்று
    சரியில்லாமல் இருந்தது,தொண்டை பிரச்னை என்று கூறினார்.பிறகு அந்த தொண்டை பிரச்னை குணமானால் முருகனை பற்றி
    ஒரு புத்தகம் எழுதுவதாக வேண்டிக்கொண்டு அந்த 80 வயதிலும் முருகன் அருளால் தன் கணீரென்ற குரலை மீண்டு(ம்)பெற்றார்.
    தான் வேண்டிக்கொண்டபடி "தமிழ்க்கடவுள்"என்ற பெயரில் நூலை வெளியிட்டார்-தன் சொந்த கையெழுத்தில்,அவர் கையெழுத்துடன்
    கூடிய புத்தகம். தங்களுக்கு மிக்க நன்றி-அன்புடன்.

    ReplyDelete